கும்பகோணம், அக். 19 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன், நேற்று மாலை முறைப்படி தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள, திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும், திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகியவை பகுதி நேர மருத்துவமனையாக காலை 07.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிறகு மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட்டு வந்த நிலையில்,
(அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும் மட்டும் 24 மணி நேரமும் இயங்கி வந்த நிலையில்) இதனை முழுநேர நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்திட கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டும் கண்டு கொள்ளப்பட்டாத நிலையில், தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக அரசு, ஐந்தே மாதங்களில், திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய இரு மருத்துவமனைகளையும், 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை நேற்று மாலை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் தலைமையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் முறைப்படி தொடங்கி வைத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
பேட்டி : கோவி செழியன், எம்எல்ஏ (திருவிடைமருதூர் தொகுதி)
தமிழக அரசின் தலைமை கொறடா