கும்பகோணம், மார்ச். 13 –
கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது, தொல் பொருள் ஆய்வாளர்களால், சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட பழமையானது. இத்திருக்கோயில் என கண்டறியப்பட்ட இத்திருக்கோயில், பெரிய அளவில், சிதலமடைந்திருந்ததாலும், கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் இருநூறு ஆண்டுகள் கடந்திருந்த நிலையில், இப்பகுதி மக்கள், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் செய்து நிறைவு செய்தனர் அதன் பின்னர், நேற்று 12ம் தேதி, காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி, கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமமும் நடைபெற்றது
தொடர்ந்து 2ம் கால யாகசாலை பூஜைகள், இன்று லட்சுமி பூஜை, நவதுர்கா பாராயணம் ஆகியவற்றும் மகா பூர்ணாஹ_தி நடைபெற்று மங்கல வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்






















