சென்னை, ஜன. 18 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் செயல்படும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்கத்தின் தமிழ்நிலம் எனும் வலைத்தளத்தில் நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகள் ஒட்டு மொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின் தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென் பொருள் உள்ளிட்டவைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப்பிரிவில் பொதுமக்கள் மனைகள் கிரையம் பெறும்போது, ஒவொவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய தனித்தனியாக மனுக்கள் பெற்படும் சூழல் ஏற்கனவே இருந்து வருகிறது அது இனி தவிர்க்கப்படும் நிலை ஏற்படும் என இதன் மூலம் தெரிய வருகிறது.
மேலும், இவ்வாறு ஒரே மனைப்பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நில அளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனிதனியே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்த நிலை இனி இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்த மென்பொருளால் மாறும்நிலை ஏற்படும் எனத்தெரிய வருகிறது.
மேலும், பழைய முறைகளை கையாளுவதின் மூலம் தமிழநாட்டில் ஒவ்வொரு மாதமும், சுமார் 1.50 இலட்சம் உட்பிரிவு மனுக்கள் அரசிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர்.
அதில் பெரும்பாலன மனுக்கள் மனைப்பிரிவைச் சார்ந்தவை எனவும், இதனால் உட்பிரிவு பட்டா மறுதல் பெறுவதில் பொதுமக்களுக்கும், அரசுக்கும் கால தாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இனி வரும் எதிர்காலத்தில் இத்தாமதத்தினை போக்கிடும் வகையில் துரித நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு, அதற்கான தீர்வாக இன்று தமிழுநாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட மென் பொருளின் சேவையினால் மெய் படும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்புதிய மென் பொருள் மூலமாக மனைப்பிவுகளை ஒட்டு மொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரிலயே பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்பட்டு மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்புதிய மென்பொருள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும் என தெரிய வருகிறது.
மேலும் தனித்தனியே பொதுமக்கள் அம்மனைப்பிரிவில் ஒருமனையை வாங்கும் போது பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தனியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரையம் பெற்ற பொதுமக்களின் பெயிரில் மாற்றம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கிறது.
மேலும் பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணபிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி அவர்கள் இன்னல்கள் தீர்க்கப்படும்.
மேலும், அம் மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதனால் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்க இயலுமெனவும் மேலும் இதுப்போன்ற பொதுப்பயன் பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவர்க்கப்படும் எனவும் அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.