மதுரவாயல், ஏப். 20 –
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்ப நிலையில் இருந்தே பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தைப் போக்குவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக திகழ்ந்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியைச் சார்ந்த மாவட்டம் மற்றும் நகரம், பேரூர், மற்றும் ஊராட்சிப் பகுதியில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களிடம் இக்கோடைக்காலத்தின் வெப்பத்தினால் ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கோடைக்கால நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து அதனை இக்கோடைக்காலம் முடியும் வரை தொடர்ந்து பராமரிப்பு செய்தும் எண்ணற்ற மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தாத்தால் ஏற்படும் தாகத்தினை போக்கும் வகையில் செயல்பட வேண்டுமென அவர்களுக்கு அக்கட்சி தலைவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மேலும் அதனை தலைவணங்கி ஏற்ற அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நலன் கருதியும், மேலும் அவர்களிடம் அக்கட்சிக்கான நற்மதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவ்விருக் கட்சியினரிடையே போட்டி நிலவி சமூக சேவையில் நீ முந்தியா நான் முந்தியா என்றவாறு அவர்களின் செயல்பாட்டினை நிரூபிக்கும் வகையில் எண்ணற்ற அளவில் நீர், மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களின் தாகத்தினை போக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பெருநகரம் சென்னை அடுத்துள்ள மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பகுதியிலும் இந்நிலை நடைப்பெற்று வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி அத்தொகுதியில் திமுகவினரிடையே சோர்வும், அதிமுகவினரிடையே சுறுசுறுப்பும் தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது இப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான நீர்மோர் பந்தல் அதிமுகவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தலாக காட்சியளிப்பதாக மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தேசிய மற்றும் இதரக் கட்சிகளிலிருந்து யாரும் அவ்வளவாக இதுப்போன்ற மக்கள் நலன் கருதி நீர் மோர் பந்தல்களை திறக்கவில்லை எனவும் மேலும் அக்கட்சிகள் தங்கள் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள தவறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போதைய நிலவரப்படி திமுகவினரை பின்னுக்கு தள்ளி அதிமுக முந்துகிறதோ என்ற தோற்றம் அப்பகுதி மக்களிடையே தோன்றுகிறதோ என நம்மை எண்ணத் தோன்றுகிறது.
இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் இரண்டு டன் எடையிலான பல்வேறு வகையான பழங்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கி இக்கோடைக்கால வெப்பத்தினால் ஏற்பட்ட தாகத்தினை அவர்கள் போக்கும் வகையில் புதியதாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சி அதிமுக கிழக்கு பகுதிச்செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அக்குடி நீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும் தாகத்தை போக்கக்கூடியதுமான நீர் மோர், ரோஸ்மில்க், தர்பூசனி, இளநீர், பழரசம், நுங்கு, கிருனிப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் என சுமார் 2 டன் எடையிலான பழவகைகளை பொதுமக்களுக்கு வழங்கிடும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
.மேலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அப்பந்தலுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அந்தரத்தில் 4 வாழை பழம் தார்கள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அப்பகுதி மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
மேலும் அதனைத்தொடர்ந்து அப்பந்தல் பொறுப்பாளர்கள் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், பைக், ஆட்டோ , பஸ் போன்ற வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் அவர்கள் நீர் மோர் மற்றும் பல்வேறு பழ வகைகளை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வின் போது முன்னாள் கவுன்சிலர் 144 வது வட்டம் பரத் ,146 வட்ட செயலாளர் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






















