காஞ்சிபுரம், ஜன. 18 –
காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு சமபந்தி அருசுவை உணவினை வழங்கியும் பொங்கல் திருவிழா வெகு கோலாகலமாக நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய பெருந்தலைவர் ராஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்
மேலும் இவ்விழாவிற்காக வாழைப்பூவினால் அமைக்கப்பட்ட தோரணமும், செங்கரும்பினால் ஆன நுழைவுவாயில், மேலும் புது பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டது, காண்போரை மெய் சிலிர்க்க வைத்த து என்றவாறு அமைந்திருந்தது இச் சமத்துவப் பொங்கல் திருவிழா, மேலும் இந்நிகழ்வில், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சார்ந்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.


























