திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கொண்டஞ்சேரி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இந்தி எதிர்ப்பு போராட்டதை அண்ணாமலை விமர்சித்து பேசி இருப்பது அவர்கள் கட்சியின் ஆதிக்க மனப்பான்மையை வெளிக் காட்டுவதாகவும், அண்ணாமலை என்பவர் ஒரு ஊதுகுழல் மட்டுமே, மேலும் அவருக்கு சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை என்றும், மேலும் பாசிச சக்தியின் கீழே வேலை பார்ப்பவர்கள் அப்படிதான் இருப்பார்கள் எனவும் மேலும் அவரின் கருத்திற்கு நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கான பதிலை மக்கள் அளிப்பார்கள் என்றார்.
அவர்கள் தலைவர்களும் அவ்வாரே தினம் பொழுதுப் போக்காக பேசிட்டு இருப்பவர்கள் எனவும் அதுப்போன்று அண்ணாமலை என்ன தாம் பேசுகிறோம் என்ற புரிதலோடு பேசுகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது மட்டும் இல்லை, அரசியில் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத பாசிச குணம் படைத்தவர்கள் இடி மற்றும் சிபிஐ வைத்துதான் அரசியல் கட்சினை எதிர் கொள்வார்கள் எனவும், இதுப் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுப்படுவார்கள் என்பதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார். மேலும் இது எல்லாம் ஆச்சரியத்தை தருவதாக தான் நினைக்க வில்லை,
மேலும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கே இந்நிலையென்றால் ஒரு சாமானியர்களை அவர்கள் எந்த எந்த நிலையில் பண்ணுவார்கள் என்பதை அவர்களுக்கு கொடி தூக்குபவர்கள் சற்று நினைத்து பார்க்க வேண்டும் என அவர்களை அன்போடுக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இன்று பாசிச எண்ணம் கொண்டவர்கள் மூட்டுகின்ற நெருப்பு வெளியேதானே எரிகிறதென யாரும் ண்ணிவிட வேண்டாம் நாளை அது உங்க வீட்டுக்கு வருவதற்கு வெகு நேரம் ஆகாது. அதனால் ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள அரசியலமைப்பு சட்டத்தையும் அதை நம்பி அதனுடன் சேர்ந்து வர மக்கள் முயற்சி செய்ய வேண்டும் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பேட்டி: திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்

























