தேனி:
தேனி மாவட்டம் மத்திய இளைஞர் மேம்பாட்டுத்துறை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் கலை விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் மாவட்ட அளவிலான இளையோர் குழுவிலான பல்வேறு அணிகள் இக் கலைவிழாவில் கலத்துக்கொண்டன. அவற்றில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றிக் கோப்பையும், சான்றுயிதழ்களையும் வழங்கினார்.
இவ் விழாவில் மாவட்ட இளையோர் ஒருங்கினைப்பாளர் அ.சுந்தரமகாலிங்கம் வரவேற்புரை ஆற்றினார் ,மாவட்ட இளையோர் நல விளையாட்டு அலுவலர் கா.சுப்புராஜ் முன்னிலை வகுக்க, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இராமசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் நடைப்பெற்ற கபடி போட்டியில் SDAT, அணி முதல் பரிசை வென்றது. கலை விழா போட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் V.P.K இளைஞர் மன்றத்தினருக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது இவ் விழாவின் முடிவில் நேரு யுவகேந்திரா K ஸ்ரீராம் பாபு நன்றி உரை நிகழ்த்தினார்.
இவ் விழாவில் பள்ளி,கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்,பொது மக்கள் இளையோர் மன்றத்தினர் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமேனார் கலந்துக் இளையோர் கலை விழாவினை சிறப்பத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.