பொன்னேரி, ஜூலை. 22 –
பொன்னேரியில் .அதிமுக அதிமுக வின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .பலராமன் தலைமையில் நடைப்பெற்றது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதை அக் கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதிலும் ஆரவாரமாக விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பின்னர்.பலராமன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். .அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்பு தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா . கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்.மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ்.,மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார். மாவட்ட பொறுப்பாளர் சுமித்ரா குமார். பொன்னேரி நகர கழக செல்வக்குமார். மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி. மீஞ்சூர் தமிழரசன். பொன்னேரி யுவராஜ். மேத்தூர் ரமேஷ் மேலூர் திராவிடச் செல்வன். மீஞ்சூர் அரவிந்தன். உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





















