அசோக் நகர்:
மத்தியபிரதேசத்தின் கரிலா கிராமப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட 6 பேர், நேற்று இரவு ஆட்டோவில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர்.
விதிஷா சாலையில் பனாயி ஹவெலி கிராமத்தின் அருகில் வந்தபோது, அதே சாலையில் வந்த லாரி கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் டிரைவர் உட்பட 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.