மீஞ்சூர், மார்ச். 28 –
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, மற்றும் 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாடு தழுவி நடைப்பெற்று வருகிறது. ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் பொது வேலைநிறுத்த மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் பஜார் பகுதி நேரு சிலை அருகே 200க்கும் மேற்பட்ட எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியுசி ,சிஐடியு, எச்எம்எஸ், எல்டியுசி ,யுடியுசி, உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டு நடை பயணமாக சென்றனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். இந்த சாலைமறியல் ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாநில துணை பொதுச்செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் துளசிநாராயணன், ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் பாலன், எல்பிஎஃப் காஞ்சி கோட்டை மாவட்ட துணைத்தலைவர் ஜெபஸ்டின் சிஐடியு மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, உள்ளிட்ட திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்




















