தஞ்சாவூர், நவ. 07 –
வேளாண்மை துறையில் சுமார் 37 ஆண்டுகள் மிகச்சிறப்பாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர் அக்ரி.சிவக்குமார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
வேளாண்மைதுறையில் 37 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய வேளாண்மை பட்டதாரியான அக்ரி சிவக்குமார் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகிலுள்ள புஷ்பவனம் கிராமத்தில் பிறந்து, தனது இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பினை முடித்தவுடன் தமிழக அரசின் வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து, விவசாயிகளின் உற்ற தோழனாய் சிறப்பாக பணியாற்றியவர் ஆவார்.
மேலும், சென்னை வேளாண்மை இயக்குனரக தலைமை அலுவலகத்தில், கூடுதல் வேளாண்மை இயக்குனராக பதவி உயர்வில் சென்று, பணியாற்றி வந்த நிலையில், கடந்த 31.10.22 அன்றுடன் பணிமூப்பு அடிப்படையில் பணி ஒய்வு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அன்றையத்தினத்தில், சென்னையில் அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வு முடிந்த நிலையில், ஓய்வு பெற்ற அக்ரி.சிவக்குமாரை கௌரவிக்கும் விதமாக, இன்று (07.11.22) தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்க தலைவர் ஜெய்ஜிபால் தலைமையில், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சங்கீதா மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் ராணி, சாந்தி, பாலையன், முருகேசன், நவீன்சேவியர், சுதா, அப்சரா, வினோதினி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லம் சென்று தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
மேலும், வேளாண்மை பட்டதாரியான அவர்களது மனைவி மாலதி அவர்கள், வேளாண்மை துறையில் தற்போது பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். வேளாண்மை உதவி இயக்குனர் அலுலவகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் அக்ரி.சிவக்குமாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.























