சென்னை,ஜூலை 21-

நாடாளு மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் போது ஒன்றிய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 , இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்பதை வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அக்கடித த்தில் மசோதவில் குறிப்பிட்டுள்ள விதிகள் , கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்பின் 7 வது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும்  உள்ளது  என அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில் மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல்,மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகள் எடுத்தல் , கட்டணங்கள் விதிப்பது , அபராதம் விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால் அது எதிர்ப்புக்களையும் அமைதின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரயிருக்கும் மசோதவை தற்போதைய நிலையில் தாக்கல் செய்யாமல் , அது குறித்து அனைத்து தர மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று மீனவர்களின் நலன் பாதிக்காத வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதியதோர் மசோதவை நாடளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here