காஞ்சிபுரம், செப். 03 –

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாழையம்பட்டு பகுதியில் சுமார் 500 நெல் மூட்டைகள் அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத் – படப்பை சாலையில் தாழையம்பட்டு பகுதியில் சாலை ஓரமாக வைக்கப்படிருந்த நெல் மூட்டைகள் கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்தது. அதன் காரணமாக சாலை ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நெல் முளைத்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியையும் கவலையையும்  ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய நகையை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும்  விவசாயம் செய்து அறுவடை செய்த 500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க நுகர் பொருள் வாணிப கிடங்கு, மற்றும் சேமிப்பு கிடங்கு இல்லாத காரணத்தினால் நெல் மூட்டைகள் வீணாகியது என அம்ம்புதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வாலாஜாபாத் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க முறையான நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். மேலும் மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here