சென்னை, ஜூலை 21-
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் .
நபிகள் நாயகம் அளித்த போதனைகளை பின் பற்றி வாழுவதே, வாழ்க்கை பயணத்தில் உன்னதமான நோக்கமாக உணர்ந்து அதன் வழி நின்று அடி பிறழாமல் பின்பற்றி பக்ரீத் பெருநாளை ஆண்டு தோறும் கொண்டாடி வருவது மகிழ்ச்சிக்குரியது.
அதைப் போன்று தாங்கள் ஈட்டிய பொருளில் முதலில் ஏழைக்கும், நண்பர்களுக்கும் பின்புதான் தங்களுக்கென பகிர்ந்தளிக்கும் பண்பான கொள்கையின் அடிப்படையில் மனித நேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை எளியவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குகின்றனர்.
நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும் பெருமையும் சேர்க்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக திருநாளை மகிழ்ச்சியுடனும் கொரோனா கட்டுபாடுகளைப் பின்பற்றியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி பக்ரீத் பெருநாள வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.