பெங்களூரு:
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்துக்கான தொடர்பாக உயரதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்டு ஏற்பட்ட சேதாரங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்தார்.