கும்பகோணம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்த காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார்.
அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வனத்துறையினருக்கும், வருவாய் துறையினர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனத்துறை அலுவலர் சண்முகம் தலைமையில் வனகாவலர்கள் துளசி ராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜா வீட்டில் பின்புறம் இருந்த 3 அடி நீளமான முதலையை கயிறு மூலம் கட்டி வேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து சென்று அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





















