பெரியமாத்தூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்டது.
சிறப்பு மிகுந்த அவ்விழாவிற்கு அம் மன்றத்தின் கிளைத்தலைவர் பி.மகேந்திரன், கிளைச் செயலாளர் எம்.நாகராஜ் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர், மேலும் மாநில துணைத் தலைவர் எம்.நாகராஜன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அவ்விழாவில் சிறப்பு அஹப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ.மெய்யழகன் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் சிறப்புப் மிக்க வாழ்க்கை வரலாறு பற்றியும் மேலும் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து மிகுந்த விளக்கத்துடன் எளிய நடையிலும் பெதுமக்களிடம் எடுத்துக் கூறி இந்திய திருநாட்டின் இறை மகன் டாக்டர் அம்பேத்கர் என்று அண்னலுக்கு புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து மாத்தூர் எம்எம்டிஏ பார்க் அருகில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அம்பேத்கர் அட்டவணை அமைப்பு தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஜிம் ராஜா உள்ளிட்டவர்களின் ஏற்பாட்டில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது,
மேலும் அவ்விழாவில் பங்கேஏற்ற பொது மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அதனுடன் இனிப்புகளையும் சேர்த்து வழங்கினார்கள். அதில் மாநகர முன்னாள் கவுன்சிலர் பிரதாபன் அம்பேத்கர் அட்டவணை அமைப்பு நிர்வாகி லோகநாதன், புத்தர் கோவில் நாகராஜ் ,வைக்காடு கார்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.