சென்னை, நவ. 18 –
செய்தி தொகுப்பு ; சோழிங்கநல்லூர் கண்ணன்
சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் அப்பகுதியில் இருந்த மூன்று பசுமாடு இரண்டு கன்று குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானத்து. விபத்துக் குறித்து தகவல் அறிந்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் விரைந்து வந்தார்.
சென்னை மேடவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(80) இவர் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை மேய்ச்சலுக்கு அனுப்பிய மாடுகளை ஒரு மணி அளவில் மேடவாக்கம் பாபு நகர், ரவி பிரதான சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. அங்கு தேங்கியிருந்த மழைநீரில் மின்சார வயர் அறுந்து விழுந்துள்ளது. அந்த பகுதியை கடந்து செல்ல முயன்ற 5 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது..
தகவலறிந்து மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் இறந்து கிடந்த மாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரிலிருந்து அப்புறப்படுத்தினர். மேடவாக்கம் கால்நடைத்துறை மருத்துவர் மைதிலி இறந்த மாடுகளுக்கு உடற்கூறு ஆய்வு செய்து வருகிறார். மேடவாக்கம் ஊராட்சி ஊழியர்கள் இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்துக் குறித்த தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சார வயர் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு மாடு உரிமையாளர்க்கு ஆறுதல் கூறினார். மேலும், தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, அறுந்து கிடந்த வயரை சரி செய்து அப்பகுதிக்கு விரைந்து மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினார்.