செங்கல்பட்டு, டிச. 23 –
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது.
குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வீணாக செல்லும் குடிநீர் குழாய் சரி செய்ய கோரி பல முறை செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் புகார் தேரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, அரசு ஒருபுறம் மழைநீரை சேமிக்கச் சொல்லி விளம்பரங்கள் மற்றும் நல்லத்திட்டங்கள் என போட்டுக் கொண்டிருந்தாலும், அதனை செயல்படுத்தும் இடத்தில் உள்ள அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இதுப் போன்ற நிகழ்வுகள் அரசு அலுவலர்களின் மெத்தனப் போக்கினால் உடனடியாக சீரமைக்கப்படாமல் விபத்துக்களையும் அடிப்படை தேவைகளான குடிநீர் பற்றக்குறைகள் சம்பந்தப்பட்ட மக்களின் எதிர்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடுகிறது.
ஆக்கபூர்வமான ஆயிரம் பணிகள் அரசுக்கு இருப்பினும், இதுப் போன்ற அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கினால், குடிநீருக்காக காலிக் குடங்களுடன் சாலைமறியல் போன்ற மக்களே விரும்ப தகாத போராட்டங்களால் சட்டம் மற்றும் போக்குவரத்து இடையூறல்கள் என அடுக்கடுக்காக எதிர்வினைகளையும் கெட்டப் பெயரும் அரசுக்கு ஏற்படுவது இயல்பாகி வருகிறது.
எனவே, தினப்பணியை அரசு அலுவலர்கள் செவ்வனே செய்யாவிடினும், தவறுகள் நடக்கும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கொடுக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்தாவது உடனடியாக அரசு உயர் அலுவலர்கள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து எடுத்திட வேண்டுமாய் அத்தெரு வாசிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் அரசுக்கு அறிவுறுத்துகிறார்.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து வீணாக தொடர் அலட்சியப்போக்கை மேற்கொண்டால், நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்து வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள் …




















