வெள்ளவேடு, ஜூலை 21-

வெள்ளவேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமிழிசை  மேற்கு மாட வீதியில் வசிக்கும் கணேசன் என்பவரின் மனைவி செல்வி என்பவரின் மகன் 29 வயதுடைய வேலாயுதம் என்பவர் இவர் குடிப் பழக்கித்திற்கு அடிமையாகி போதையில் இருக்கும் போதெல்லாம் தன்னைத்தானே உடல்களில் அறுத்து கொள்வாராம். மேலும் கடந்த பத்து தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்கிட்டுள்ளார். இதனை அருகே வசிக்கும் வீட்டின் உரிமையாளர் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு அவரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here