மீஞ்சூர், மே. 18 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வருகின்ற நாளை 19ஆம் தேதி வரதராஜ பெருமாளுக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதற்காக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பகுதிக்கு வந்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்லும் பகுதிகளையும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் மின்சார ஒயர்களையும். சாலையின் விரிவாக்கம் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடங்கள் அவர்களுக்கான வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

.மேலும் ரத உற்சவம் நேரத்தில் மின்சார தடைகளை குறித்து மின் வினியோக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார். பின்பு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டி முடிவெடுக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கு பெறும் பக்தர்களுக்கு குடிநீர். மருத்துவம் பாதுகாப்பு. உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்து ஏற்பாடு செய்தார்.

முன்னதாக மீஞ்சூர் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியினுள் சென்று கட்டிடங்களை ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி மையம் புதிதாக அமைத்திட ஏற்பாடு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கினார்.

இந்நிகழ்வில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் .துணைத் தலைவர் அலெக்சாண்டர் .வார்டு உறுப்பினர்கள் நக்கீரன். அபுபக்கர் .ரஜினி .உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களும் மற்றும் ஜெகதீசன். காமராஜ் .குரு சாலமோன் .வினோத்குமார். உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here