சென்னை, அக். 10 –

தமிழ்நாட்டில் நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைப் பெற்ற 9 மாவட்டங்களுக்கான சாதராண தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 78.47 சதவீத வாக்கும் ஏனைய 28 மாவட்டங்களில் நடைப்பெற்ற தற்செயல் தேர்தலின் வாக்குப் பதிவில் 70.51 சதவீத வாக்குகளும் பதிவாகிவுள்ளன.

நேற்று நடைப்பெற்ற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தலுகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப் படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் அமைதியான முறையில் நடைப்பெற்றது.

இந்த வாக்குபதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ் கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் 72.33 சதவீதமும், செங்கல்பட்டு 75.51 சதவீதமும், வேலூர் 81.07 சதவீதமும், இராணிப்பேட்டை 82.52 சதவீதமும், திருப்பத்தூர் 77.85 சதவீதமும், விழுப்புரம் 85.31 சதவீதமும், கள்ளக்குறிச்சி 82.59 சதவீதமும், திருநெல்வேலி 69.34 சதவீதமும், தென்காசி 73.35 சதவீதமுமாக மொத்தத்தில் சராசரியாக 78.47 சதவீதம் வாக்குகள் பதிவாகிவுள்ளன.

28 மாவட்டங்களில் நடைப்பெற்ற தற்செயல் தேர்தல்களில் சராசரியாக மொத்தத்தில் 70. 51 சதவீதம் வாக்குகள் பதிவாகிவுள்ளன.

இதில் தென்காசி மைவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவ சைலம் கிராம ஊராட்சி, வார்டு 3 க்கு நடைப்பெற்ற மறு வாக்குப் பதிவில் 80.79 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளன.

நாளை அக் – 11 மறு வாக்கு பதிவு நடைப்பெறும் வாக்கு சாவடிகள்

9 மாவட்டங்களில் நடைப்பெற்ற இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் போது காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூந்தண்டலம் கிராம ஊராட்சி, வாக்குச் சாவடி எண் 173 ( அனைத்து வாக்களர்களுக்கான வாக்குச் சாவடி ) க்கு ஒதுக்கப்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12 க்கான உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் தவறாக சின்னம் பதிவாகி இருப்பது தெரிய வந்ததால் இந்த வாக்குச் சாவடியில் மட்டும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12 க்கான உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு மறு வாக்குப் பதிவு நடத்த காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அனுமதி கோரியதன் அடிப்படையில் அதற்கு மட்டும் வரும் அக். 11 அன்று அதாவது நாளை மறுவாக்கு பதிவு நடத்திட தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

 மேலும் செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் கிராம ஊராட்சி வார்டு எண் 1 மற்றும் 2 க்கான பொதுவாக அமைக்கப் பட்ட இரு வார்டு வாக்குசாவடி எண் 32 ( அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி ) யில் 1 வது வார்டுக்கான உறுப்பினர் பதவியிடம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2 வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை 1 வது வார்டைச் சார்ந்த வக்காளர்களுக்கும் வழங்கி வாக்களித்திருப்பது தெரிய வந்ததால், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் , ஆலப்பாக்கம் கிராம ஊராட்சியின் 2 வது வார்டு உறுப்பினர் தேர்தலை மட்டும் நிறுத்தி வைத்து விட்டு மேற்படி பதவி’யிடத்திற்கு மட்டும் அக் – 11 நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் அச்சிறுப்பாக்கம் அவர்களுக்கு உத்திரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here