சென்னை, அக். 10 –
தமிழ்நாடு முழுவதும் கடந்த அக் 8 ஆம் தேதி 3391 தனியார் உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வை வேளாண்மை துறையினரால் நடத்தப் பட்டதில் அதில் 101 கடைகளில் உரக் கட்டுபாட்டு விதிகளை பின் பற்றாததை அக் குழு கண்டறிந்து அக் கடைகளின் மீது நடவடிக்கையை மேற் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சாதகமான பருவ மழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணி தீவிரமாக நடைப் பெற்றுவருகின்றன. குறிப்பாக சம்பா நெல் நடவுப் பணிகள் 13.168 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா நடவுப் பணிகள் முழு வீச்சில் நடைப் பெற்று வருவதால். உரத் தேவை அதிகரத்துள்ளது. உர விற்பனைத் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் செயல் படுகிறது. விவசாயிகள் உரக் கண்காணிப்பு மையத்தினைத் தொடர்புக் கொண்டு உரம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த அக் 8 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேளாண்மைத் துறையினரால், உரம் இருப்பு, நிர்ணயிக்கப் பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல், மற்றும் விற்பனை முனையக் கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் முதலான பணிகளை கண்டறிய ஆய்வு மேற் கொண்டனர்.
புத்தக இருப்பு, உண்மை இருப்பு மற்றும் வித்தியாசம் காணப்பட்ட விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக் கடைகளின் உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது.
உரம் இரும்பஃபு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 16 உரக் கடைகள் மீது எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது. கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக் கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளனர். மேலும் சட்டப் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று வேளாண்மை துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
மானிய உரங்களை விற்பனை முனூயக் கருவியில் பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யாத ஒரு உரக்கடை மீது எம்.எஃப்.எம்.எஸ் குறியிட்டு எண் தடை செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசின் வழிகாட்டுதல் முறைகளின் படி உரங்களை விற்பனை முனையக் கருவியின் மூலம் விவசாயின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நிர்ணயம் செய்த விற்பனை விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்திவுள்ளனர்.
இதனைப் பின்பற்றாமல் உர விற்பனை செய்யும் உரக்கடை உரிமையாளர்களின் உரிம ம் இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கையை இந்த ஆய்வின் போது தெரிவித்துள்ளனர். மேலும் அதனை மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை அத்தியவாசிய பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உரக் கட்டுப் பாட்டு ஆணை 1985 இன் படி மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளைக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றிக் கிடைத்திட உரக் கடைகள் வேளாண்மைத் துறையால் தொடர்ந்து இதுப் போன்ற காண்காணிப்பு ஆய்வுகள் நடத்தப்படும் என வேளாண்மை துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.




















