திருவாரூர், ஜூலை. 13

திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர் டி.முருகையன் தலைமையில் *மறியல் போராட்டம்* நடைப்பெற்றது.

அதுப்போன்று, மன்னார்குடி தேரடியிலிருந்து பேரணியாக புறப்பட்டு மன்னார்குடி நகராட்சி முன்பு மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமையிலும் *மறியல் போராட்டம்* நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here