புதுடெல்லி:

பாராளுமன்ற தோ்தலுக்கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடிக்கும் வேளையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் துணைநில ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக, பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ள அவர் பிரதமர் மோடிக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் முதல் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1ல் தொடங்கவுள்ள உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா, பாகிஸ்தானின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதம் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு என்றும் துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here