ராமநாதபுரம், மார்ச்
ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் 2019 தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண் காணித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள மாவட்டத்தில் 12 பறக்கும் படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள், 4 வீடியோ டீம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள அரசு பொது கட்டங்களில் உள்ள அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பர சின்னங்களையும், தனியார் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்களையும் அகற்றிட உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு இன்றை தினம் வரை மொத்தம் 17 ஆயிரத்து 945 விளம்பரங்கள் அகற்றப் பட்டன. இதில் அரசு பொது கட்டடங்களில் 12 ஆயிரத்து 677 விளம்பரங்களும், தனியார் கட்டடங்களில் 5 ஆயிரத்து 268 விளம்பரங்களும் அடங்கும். உரிய கால அவகாசம் வழங்கியும் முறையே விளம்பரங்களை அகற்றாமல் இருந்த வகையில் 23 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் வரை பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழு அலுவலர்கள் தணிக்கையின் மூலம் 15 நேர்வுகளில் மொத்தம் ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் முறையான ஆவணங் களின்றி பறி முதல் செய்யப் பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக ரூ.15 லட்சத்து 9 ஆயிரத்து 850 மதிப்பிலான இந்திய பணமும், ரூ.28.17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் அடங்கும். இதில் 2 நேர்வுகளில் சுமார் ரூ.7.60 லட்சம் மதிப்பில் லேப்டாப், கை கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களும் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கீழக்கரை பகுதியில் மேற் கொள்ளப் பட்ட தணிக்கையின் போது முறையான ஆவணங்களின்றி ஒரு நபரிடமிருந்து 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள், 10 ஆயிரம் மலேசியன் ரிங்கட் , ரூ. ஒரு லட்சம் இந்திய பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கதுறை மற்றும் வருமானவரி துறை ஆகிய துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப் படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here