கும்பகோணம், டிச. 13 –
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் அல்லது அதனை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவர மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழமை மாறாமல், ரூபாய் 339 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் சதுரஅடியில் நடைபெறும் புனரமைக்கும் பணிகளை இன்று பாரத பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, பிரதமர் நலமோடு வாழவும், நாடு வளர்ச்சி பெறவும் வேண்டி பிராத்தனைகளுடன் விசேஷ பூஜைகளை, பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் 51 ஆயிரம் சிவாலயங்களில் மேற்கொண்டு வருவதுடன், அங்கு அகன்ற திரையில், காசியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வினை நேரடி ஒளிப்பரப்பும் செய்கிறது.
இதன் ஒருபகுதியாக, கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில், பிரதமருக்காகவும், இந்திய வளர்ச்சிக்காகவும், சிறப்பு பிராத்தனை செய்து விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சியில் தமிழக பாஜக துணை தலைவர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஏராளமான பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த, கருப்பு முருகானந்தம்,
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, பாஜக, அதிமுக, சமூக வலைதளம் வழியாக ஆளும் திமுகவினரின் தவறுகளை சுட்டிக்காட்டினால், அவை வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கும் வகையிலும், எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தியே ஆட்சி செய்து வருகின்றனர், அவர்களை செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கல்யாணராமன், மரியதாஸ், கிஷோர் கே சுவாமி என பட்டியல் நீள்கிறது, என குற்றம்சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் அல்லது அதனை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவர மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும். என்றும், வாக்குறுதி அளிக்காமலேயே மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது, அதனை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதி தராமலேயே, தத்தம் மாநில வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ளன. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு, பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்திற்கு காரணம் தமிழக அரசு, தான் இதனை தீர்க்க மாநில அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்
பேட்டி : கருப்பு முருகானந்தம், மாநில துணைத்தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு