காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 4 மாத உண்டியல் திறப்பு : ரூ.13.51 லட்சம் காணிக்கை
காஞ்சிபுரம், டிச. 17 -
கந்தபுராணம் அரங்கேறிய புகழ்மிக்க திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் 4 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்துரத்தினவேல்,ஆய்வாளர் ப்ரீத்திகா, கோயில்...
கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...
கும்பகோணம், டிச. 17 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...
கும்பகோணம் : மார்கழிமாதத்தை முன்னிட்டு மூன்று அம்மன் கோயில்கள் இணைந்து நடத்தும் ஏகதின ஆண்டு உற்சவம் : இருகாளிகளின்...
கும்பகோணம், டிச. 16 -
கும்பகோணத்தில் மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு இங்கு பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களுக்கும் இணைந்து நடத்தும், ஏகதின ஆண்டு உற்சவம் விழா இதனைத் தொடர்ந்து இன்று இருகாளிகளின் திருநடனத்துடன் திருவீதியுலா சிறப்பாக...
திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ..
கும்பகோணம், டிச. 14 -
108 வைணவ தலங்களில் 12வது தலமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை நிறைவு சோமவார விழா ..
கும்பகோணம், டிச. 13 -
கும்பகோணம் அருகே மத்தியார்சுனம் என போற்றப்படும் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து லட்சதீபம் ஏற்றும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது, இதில் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...
காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி சமர்பிப்பு : திரளான சுமங்கலி...
ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் மூலவர் அம்மனுக்கு ரூ.5லட்சம் செலவில் தங்கத் தாலி சமர்ப்பிப்பு இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், டிச. 13 -
முக்தி தரும் முக்கிய நகரமாம் காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே அருள்மிகு ஆதிபீடா...
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டை விளக்கேற்றி நோய் தீர்க்க...
காஞ்சிபுரம், டிச. 12 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழா நடைப்பெற்றது அதில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி தங்களது நோயைத் தீர்க்க நேர்த்தி கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை வேண்டி சென்றனர்..
கோயில் நகரமான...
திருநாகேஸ்வரம் நாகநாதசுவமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்தவாரி விழா : பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருளினார்
கும்பகோணம், டிச. 12 -
நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை...
கும்பகோணம் : திருவிசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தின புனித நீராடல் விழா
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் ஐதீகம் கொண்ட விசேஷ கிணற்றில் இருந்து நீர் இறைத்து தன்னார்வலர்கள் ஊற்ற, ஆயிரக்கணக்கானோர் பக்தி சிரத்தையுடன் நீண்ட வரிசையில் வந்து...
கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில்...













