மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை படைத்த சிலம்பட்ட மாணவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் முத்து ராஜம் தனியார் பள்ளியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தமிழத்தின் 11 மண்டலங்களை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப் படுத்தினார்கள்.
அதில் 36 மணிநேரம் ஒற்றை சிலம்பம் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட தற்காப்பு கலை உபகரணங்களை பயன்படுத்தி உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிலம்பாட்ட மாணவர்கள் குழுக்களாக சிலம்பம் சுற்றினர்.அதனை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு குழுவினர் கண்காணித்து உலக சாதனை புத்தகத்தில் அங்கிகரித்தனர்.
தமிழர்களின் வீரக் கலைகளை பறைசாற்றும் விதமாக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 10 மணி நேரம் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, சொடிக்குச்சி, சுருள்வால், மடுவு, பிச்சுவா கத்து, சக்கர பந்தம், வெருங்கை சண்டை முறை, கதை ஆகிய 10 விதமான தற்காப்பு கலை உபகரணங்களை சுழற்றும் சாதனை நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று சாதனையை நிகழ்த்தினர். முடிவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.





















