தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவலஞ்சுழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பாபு தேநீர் கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து சுந்தர பெருமாள் கோவில், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், உடையாளூர், திப்பிராஜபுரம், கொற்கை, மருதாநல்லூர், சுவாமிமலை, இன்னம்பூர், கடிச்சம்பாடி, ஏராகரம், உள்ளிட்ட 27 ஊராட்சிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதில் மாவட்ட செயலாளர்கள் பாரதி மோகன், ரத்தினசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முக பிரபு, ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், தேசிய திராவிட முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர், உள்ளிட்ட கழக நிர்வாகி கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்ல திறந்த வேனில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் பாபு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அதிமுக சார்பில் ரோஜா மலர்களை தலையில் கொட்டி, வீரவால் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து திருவலஞ்சுழி மெயின் ரோட்டில் தேநீர் கடைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் அங்கு பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.






















