கும்பகோணம், டிச. 12 –
நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை இருப்பினும் ஏராளமானோர் கலந்து கொண்டு கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில், நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர் இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு ( ஸ்ரீகிரிகுஜாம்பிகை ) இருபுறமும் திருமகள், கலைமகள், வீட்டிருந்;து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும்; தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார் இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் நாகநாதசுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார்
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 03ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம் ஐந்து தலை நாகம், கைலாச வாகனம், என பல்வேறு வாகனங்களில் பிரகார உலா மட்டும் நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 07ம் திருநாள் 09ம் தேதி வியாழக்கிழமை திருக்கல்யாணம் 10ம் நாளான இன்று விநயாகப்பெருமான் வெள்ளி மூக்ஷிக வாகனத்திலும், நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களிலும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் என பஞ்சமூர்த்திகளும் நாதஸ்வர மேளதாளம் முழங்க, கோயில் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் பக்தர்கள் திருக்குளத்திற்குள் அனுமதித்தனர் தொடர்ந்து அஸ்திரதேவருக்கு, திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவருடன் சிவாச்சாரியார் திருக்குளத்தில் இறங்கி, மும்முறை முழங்கி எழ, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது அப்போது அங்கிருந்த இருந்த பொதுமக்கள் கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனர்.