ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் மூலவர் அம்மனுக்கு ரூ.5லட்சம் செலவில் தங்கத் தாலி சமர்ப்பிப்பு இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், டிச. 13 –
முக்தி தரும் முக்கிய நகரமாம் காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் மூலவர் அம்பாளுக்கு வைரம் பதித்த தங்க தாலி சமர்ப்பிக்கும் விழா இன்று நடைபெற்றது .
தங்க தாலி சமர்ப்பிக்கும் விழாவை முன்னிட்டு ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, நவ துர்கா ஹோமம், வேதிகா அர்ச்சனை, செய்யப்பட்டு வைரங்கள் பதித்து தங்கத்தால் செய்யப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பீலான தங்க தாலி, கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவர் அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
தங்க தாலி சமர்ப்பிக்கும் விழாவில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு ஆதிகாமாட்சி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.