சென்னை, ஜன. 3 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 உதவி இயக்குநர்கள் மற்றும் 7 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

     குழந்தைகள், மகளிர், மூத்தக் குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்துறையின் சமூகநலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவில் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களும், வட்டார அளவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும்  86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

     இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் திருமதி.வே.அமுதவல்லி, இ.ஆ.ப., சமூகநலத் துறை இயக்குநர் திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி எஸ். வளர்மதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here