காஞ்சிபுரம், டிச. 25 –
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ளது பழமையான கிறிஸ்துவ தேவாலயம்.இந்த தேவாலயத்தில் நடைபெற்றுவரும் நள்ளிரவு பிரார்த்தனையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தன் குடும்பத்துடன் சென்று அங்கு வருகை புரிந்துள்ள பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளையும் வழங்கினார்.
தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் யாரும் எதிர்பாராத நேரத்தில் வருகை புரிந்தது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















