ராமநாதபுரம், ஆக. 25- ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி உதவி ஆளுநர் கே.நானா (எ) நாகரத்தினம் முன்னிலை வகித்தார். ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் கே.கணேச கண்ணன், செயலாளர் ஜி.ஜெயகுமார், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி செயலர் ஜீவலதா, முதல்வர் முனைவர் ஜி.முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

பட்டயத் தலைவர் தொழிலதிபர் தினேஷ் பாபு, முன்னாள் உதவி ஆளுநர்கள் சுகுமாறன், பார்த்தசாரதி, உறுப்பினர்கள் பாபு, அண்ணாதுரை,, காங்கிரஸ் பிரமுகர் பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், ராஜா ராம் பாண்டியன், செல்வம், ஜெகன் அகிலன், ஜகத் இளவரசன், செங்குட்டுவன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரண்மனையில் துவங்கிய பேரணி ராமநாதபுரத்தில் வண்டிக்கார தெரு வழியாக முக்கிய வீதிகளில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் வந்து வழிவிடுமுருகன் கோயில் முன்பாக பேரணி முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு ராமநாதபுரம் வாலியா காஸ் ஏஜன்சி சார்பில் குளிர்பானங்களும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.