கும்பகோணம், டிச. 22 –
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி வட்ட தலைவர் துரைராஜ் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன் போக்குவரத்து ஓய்வு நலச்சங்க தாமோதரன் மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்கம் மேகநாதன் மாவட்ட துணைத்தலைவர் பழ. அன்புமணி மாவட்ட இணைச்செயலாளர் வெங்கடேசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் திருவிடைமருதூர் வட்ட தலைவர் சிவராமன் வட்ட செயலாளர் உதயகுமார் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் குரு சந்திரசேகரன் வட்ட பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2020 ஆம் ஆண்டிற்கு பின் மரணம் அடைந்த விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வு கால பலன்களை வழங்கிட வேண்டும் மின்வாரியத்தில், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற அனைவருக்கும் தற்போது பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்தி பழைய ஓய்வு திட்டத்தில் அவர்களை இணைக்க வேண்டும் கொரோனாவை காரணம் காட்டி ஆறு மாத அகவிலைப்படி உயர்வு கடந்த 2021 ஆண்டு முடக்கப்பட்ட நிலையில் தற்போது வழங்க வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்காமல் ஆறு மாதம் கடந்துள்ளது உடனடியாக நிலுவையுடன் அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுதியர்களுக்கு வழங்கப்பட குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹ 12000 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயதுடைய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் முதியோர்களுக்கு ரயில் வண்டிகளில் ஏற்கனவே வழங்கி வந்த கட்டண சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வலியுறுத்தி வருகிற டிசம்பர் 27ஆம் தேதி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு அனைத்து ரயில்கள் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன






















