திருவிடைமருதூர், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அவ்வணி வகுப்பில் துணை ராணுவத்தினரின் பங்கேற்றனர்.

தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக், தலைமையில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.

மேலும் அந்த பேரணி திருபுவனம் கடை வீதியிலிருந்து தொடங்கி திருவிடைமருதூர், கோவிந்தபுரம், ஆடுதுறை வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. அந்த பேரணியில் காவல்துறை ஆய்வாளர்கள் சுகுணா, சியாமளா, உதவி ஆய்வாளர் தன்ராஜ், மற்றும் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கையில் துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அணி வகுத்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here