ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவி சிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித் திருவிழா பாரம்பரிய கலைகளுடன் விமரிசையாக கொண்டாடப் பட்டது.
ஆவடி- செப்டம்பர், 3- ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை அப்பகுதி மக்கள் பாரம்பரிய கலைகளுடன் அத் திருவிழாவினை கொண்டாடினர். இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ சட்டி ஏந்தல், பூக்குழி மிதித்தல், பறவை காவடியில் தொங்கியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி நகர் பகுதியில் ஸ்ரீ சிவசக்தி கரு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்
21வது ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கோவிலின் சக்தி உபவாசகர் ஸ்ரீதர்சாமி தலைமையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் பக்தர்கள் தீமித்து வழிப்பட்டனர். இரண்டாவது நாளாக 300 கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்
தலையில் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள் அம்மனுக்கு அபிசேகம் செய்தனர் பின்னர் பக்தர்கள் தீச்சட்டி கையில் ஏந்தியபடி முதுகில் அலகு குத்தியும், பறவை காவடியில் தொங்கியும் உடலில் தென்னங்குலை கட்டி இழுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக நாகாதம்மன் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் சிவசக்தி கருமாரியம்மன் வானவேடிக்கை களுடன் ஊர்வலமாக பாபு நகர், காந்தி நகர், கக்கன்ஜி நகர் சாஸ்திரி நகர், வழி சென்று ஆலயத்தை வந்தடைந்தார். இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளிமாநில பக்தர்களும் ஏராள மானோர் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.