இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்கும்- டிரம்ப் நம்பிக்கை
ஹனோய்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர்....
5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை
பாங்காக்:
தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த...
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக...
தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
கொழும்பு:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது....
அமெரிக்க தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு-5 பேர் பரிதாப பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு...
கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள் ஓட்டம்
கலி:
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19 மணியளவில் பூமி குலுங்கியது.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில்...
பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்பு
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா....
ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை: வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது
டாக்கா:
வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது...
பின்லேடன் மகனின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டோம்-சவுதி அரேபியா அறிவிப்பு
துபாய்:
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு...



















