மொகடிஷூ:
சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் மொகடிஷூவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மக்கா அல் முக்காரமா சாலையில் நேற்று வந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதவிர மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.