அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, ‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று செய்திகள் வருகின்றன. மே 1-ந் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த `மிஸ்டர்.லோக்கல்’ படமும் ரிலீசாக இருக்கிறது. இதன் மூலம் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகி உள்ளது.