மீஞ்சூர், மே. 09 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி வயசு 50 இவருக்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும் .2 மகன்கள் .1 மகள் உள்ளனர். மேலும், இவர் மீது 3 கொலை வழக்குகளும், இருபத்தி எட்டு குற்ற வழக்குகளும் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வாயலூர் அடுத்த திருவெள்ளைவாயில் பகுதியில் சொகுசு மது அருந்தும் பார் புதிதாக அமைத்து அதற்கான திறப்பு விழாவை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் மது அருந்தும் பாரின் உள்ளே மூர்த்தி நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 9 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்து மூர்த்தியை சரமாரியாக வெட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து செங்குன்றம் மது தடுப்புப் பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும்  குறித்து வழக்குப்பதிவு செய்து இக்கொலைக் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here