கும்பகோணம், பிப். 03 –
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்றும், நாளையும் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்றும் நாளையும் கும்பகோணத்தில் அம்மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாரதி தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி மாநில குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாநில குழு கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் பெரியசாமி வீரபாண்டியன் மாநில பொருளாளர் ஆறுமுகம் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்பூர் சுப்பராயன் நாகை செல்வராஜ் சட்டமன்ற குழு தலைவர் இராமச்சந்திரன் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட முக்கிய மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நாளை நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிய வருகிறது.























