மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here