ராசிபுரம்: தேசிய அளவிலான 2 நாள் வில்வித்தை போட்டி : 5 மாநிலங்களைச் சேர்ந்த 600 க்கும்...
இராசிபுரம், ஏப். 09 -
ராசிபுரத்தில் இரண்டு நாள் நடக்கும், தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், 5 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில், இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி...
இரானி கோப்பை கிரிக்கெட்: கார்னிவர் சதத்தால் விதர்பா 425 ரன்கள் குவிப்பு
ரெஸ்ட் ஆப் இந்தியா - விதர்பா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட...
முதல் ஒருநாள் கிரிக்கெட்-இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
ஐதராபாத்:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள்...
சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார் பெடரர்
துபாய்:
ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர்...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
ரவிசாஸ்திரி யோசனை முட்டாள் தனமானது-அஜீத் அகர்கர் பாய்ச்சல்
புதுடெல்லி:
இந்திய அணி கேப்டன் வீராட்கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் என 3 நிலையிலும் அவர் சமீபகாலமாக மிகவும் அபாரமாக ஆடி வருகிறார்.
டெஸ்டில் 4-வது வீரராகவும், ஒருநாள் போட்டியிலும் 20 ஓவரிலும் கோலி 3-வது வரிசையில் ஆடி வருகிறார்....
2வது ஒருநாள் போட்டி – பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித்...
24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை
செயின்ட் ஜார்ஜ்:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....
புரோ கைப்பந்து போட்டி-சென்னை அணி மும்பையிடம் தோற்றது
சென்னை:
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை)...
வாய்ப்பு கிடைத்த இரண்டு முறையும் ரன்அவுட் ஆன விஜய் சங்கர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (0), தவான் (21) மற்றும் அம்பதி ராயுடு (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 75 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அப்போது விராட்...