ரெஸ்ட் ஆப் இந்தியா – விதர்பா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. வாத்கர் 50 ரன்னுடனும், கார்னிவர் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது, வாத்கர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் கார்னிவர் சிறப்பாக விளையாடி முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வகாரே 20 ரன்களும், குர்பானி 28 ரன்களும், தாகூர் 10 ரன்களும் அடிக்க விதர்பா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சார்பில் ராகுல் சாஹர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
95 ரன்கள் பின்தங்கிய நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.