திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அவ்விடத்திற்கு இரண்டு மணி நேரம் கடந்தும் காவல் துறையினர் வராததால், அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. இதுப் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு காரணம் கடைவீதி மிகவும் நெருக்கடி நிறைந்த இடமாகவும் அங்கு சுற்று வட்டப் பாதை அமைக்காமல் அந்த வேலை துவங்கி மிகவும் ஆமை வேகத்தில் துவங்கி நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே விரைந்து வேலையை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.






















