திருவள்ளூர், ஜூன். 19 –

திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்  லயன்ஸ் கிளப் வியாசை நார்த் 324 கே,மாத்தூர் எம்.எம்.டி.ஏ நடைப்பயிற்சி நண்பர்கள் நல சங்கம் கிளப்பின் 1004 ஆவது இலவச கண் சிகிச்சை முகாம், கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட கவுண்டர் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இம் முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்தல், உயர்தர கண் பரிசோதனைகள், மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான அறுவை சிகிச்சை உட்பட அனைத்து வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் இம் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அப்பயனாளிகளுக்கு, இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்குப்பட்டு, அவர்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்டனர்.

மேலும் இம்முகாம், திருவள்ளூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் கொண்டக்கரை ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் துவக்கி வைத்தார். இம்முகாமில் 250 பேர்க்கும் மேற்பட்டவர்பகள் கலந்துக் கொண்டனர். மேலும் இச்சிகிச்சை முகாமில், 40 மருத்துவ பயனாளிகளுக்கான கண் அறுவை சிகிச்சைக்காக, சங்கரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜெ.சுப்பிரமணி ,சமூக ஆர்வலர் டி.வி.ரமேஷ்பாபு, கே.ஆனந்தன், ஆர்.வேலு, விக்கி, ராகேஷ், சூர்யபிரகாஷ், நிதிஷ், மகேஷ் உள்ளிட்டவர்களும் திரளான அக்கிராம மக்களும் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here