கும்பகோணம், செப். 05 –
கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார் மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கும்பகோணம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகள் சித்ராவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சித்ராவின் தந்தை கிருஷ்ணனின் பூர்வீக சொத்தான மூணு ஏக்கர் நிலம் மற்றும் 150 குழி வீட்டு மனையை அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் வைத்துக்கொண்டு சித்ராவுக்குரிய பங்கை தர மறுத்ததால் இது குறித்து பலமுறை புகார் மனுக்களை அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அப்புகார் மீதான நடவடிக்கைகளை இதுவரை அவர்கள் மேற்கொள்ளாததால். இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கிருஷ்ணன் மனைவி புகார் மீது உரிய நடவடிக்கை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வது என மண்ணெண்ணெய் கேனுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு குமார் மற்றும் சித்ரா வந்ததால் அவ்வளாகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதுக்குறித்து தகவலயறிந்த கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எண்ணெயை கீழே ஊற்றினர். மேலும் கோட்டாட்சியர் லதாவிடம் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இது குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை அன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வீடு திரும்பினார்.