தஞ்சாவூர், மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார்.

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சை அடுத்த வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் விஜயன் (56) ஜேம்ஸ் (46) இவர்கள் இருவரும் பெயின்டராக வேலை பார்த்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை அவர்கள் இருவரும் முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.அப்போது, திருக்கானூர்பட்டி அருகில் வந்த போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அவ்விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மேலும் அதில் படுகாயம் அடைந்த ஜேம்ஸ் உள்பட இரண்டு பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜேம்ஸ் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

அதுக் குறித்த தகவலை மருத்துவர்கள் ஜேம்ஸ் மனைவி கில்டா விடம் தெரிவித்து உடல் உறுப்புகள் தானம் குறித்து எடுத்து கூறிவுள்ளனர். தன் கணவரின் உடல் உறுப்புகள் சிலரை வாழ வைக்கும் எனில் அதனை பயன்படுத்திக் கொள்ள கில்டா ஜேம்ஸ் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகள தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட ஜேம்ஸ் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மருத்துவமனை முதல்வர், கோட்டாட்சியர் உள்பட மருத்துவர்கள் ஜேம்ஸ் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here